Latest posts
Your Blogger posts appear here in the main content area.
Tuesday, November 23, 2021
DIET SALEM - புதிய இணையதளம்
நமது சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனைத்து விவரங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துகொள்ள புதிய இணையதளம் மதிப்பிற்குரிய முதல்வர் திரு.செல்வம் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே கிளிக் செய்யவும்
Sunday, November 21, 2021
அறிவியல் ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான மாநாடு
இந்தியாவின் 75வது சுதந்திரக் கொண்டாட்டம்
இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் அறிவியலின் பங்கு
என்ற தலைப்பில்
அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான மாநாடு
2021 நவம்பர் 29-30, புது தில்லி
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நமது இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அடித்தளமிட்ட, மனிதர்களின் பங்களிப்பு, இந்திய விஞ்ஞானிகளின் இயக்கங்கள், அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள், அறிவியல் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல்சார் இயக்கங்களின் ஈடு இணையற்ற பங்களிப்பால் இந்தியாவின் 75வது சுதந்திரதின ஆண்டைக் கொண்டாடி வருகிறோம்.
அதுசமயம் , இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விக்யான் பிரச்சார் நிறுவனம் மற்றும் விபா உடன் இணைந்து இந்திய அரசின் , சி.எஸ்.ஐ.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கம்யூனிகேஷன் சார்பில் அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் தேசிய அளவிலான மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தேசிய அளாவிலான மாநாடு நவம்பர் 29-30, 2021 ஆகிய இரு நாட்களில் புதுடில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் ( Council of Scientific Industrial and Research) தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு இணையவழியில் மற்றும் நேரடியாகவும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்தும் விஞ்ஞானிகள் , அறிவியல் சார் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள், ,அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து சிறப்பு வாய்ந்த கருத்தாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இம்மாநாட்டில் ஆறு அமர்வுகள் நடைபெற உள்ளன. விடுதலைக்கான கருவியாக அறிவியல் என்பதில் கவனம் செலுத்தும் வண்ணம், விஞ்ஞானிகளின் பங்கு, கல்வி நிறுவனங்களின் இயக்கம், கொள்கை மற்றும் திட்டமிடல் ,விஞ்ஞானிகளின் பார்வை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும். அறிவியல் சார் விழிப்புணர்வினையும், ஆராய்ச்சிதுறையில் ஈடுபாட்டையும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்களிடையே ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இம்மாநாட்டில் இணையவழியில் கலந்து கொள்ளலாம். சிறப்பான கட்டுரைகளை அனுப்பும் ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்கள் நேரடியாக மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.
இம்மாநாட்டின் தலைப்புகளில் கட்டுரைகள், சுவரொட்டிகள், கவிதைகள், ஆவணப்படங்கள், , குறும்படங்கள் ஆகியவற்றை megaconf.communicators@vigyanprasar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 22க்குள் சமர்ப்பிக்கலாம்.
பதிவு செய்ய: http://swavigyan75.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
For Teacher Participation link
For Teacher Submit their Paper abstract
பதிவு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 27, 2021
மேலும் விவரங்களுக்கு
கண்ணபிரான்,
கலிலியோ அறிவியல் கழகம் -8778201926
என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, November 16, 2021
பள்ளி மான்யம் தொகையின் வரவு செலவு விவரம் தினசரி பதிவு செய்யும் முறை
Kindly circulate these videos for the benefit of elementary schools to use the finance module:
1. Link to Video to add income :
2. Link to video to add expenditure :
3. Link to video to add daily status :
2021-2022 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான மானியத்தொகை (COMPOSITE SCHOOL GRANTS)
📛📛📛📛📛📛📛📛📛📛
*2021-2022 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான மானியத்தொகை (COMPOSITE SCHOOL GRANTS) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!!*
📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇
🔥🔥🔥🔥🔥🔥🔥👁️👁️👁️👁️👁️👁️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊
Friday, October 15, 2021
கட்டுரை போட்டி
உணவு நேர பள்ளிச் செயல்பாடுகள்.
கட்டுரையைச் சமர்பித்த பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் ,தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பு - கட்டுரை PDF OR WORLD DOCUMENT ஆகவும் ஒரு MB குள்ளும் பதிவிடவும்.
SUBMIT LINK :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeicoErGkjscTR6lSZrfciSczJrcdRk-iJuTMCX7fZKeEOluw/viewform
WHATS UP LINK :
https://chat.whatsapp.com/JxdP3JPJNmY21NXeoHGPD9
LAST DATE :
20.10.2021
Subscribe to:
Posts (Atom)
