SS EDU MEDIA KADAYAMPATTI
Colorful • Spacious • Informative educational design
Educational information hub

SS EDU MEDIA KADAYAMPATTI

With hard work and dedication, anything is possible.

  • School News
  • Exam Updates
  • Learning Resources
  • Student Success

Announcements

Post admissions, meetings, competitions, and important notices in one place.

Learning support

Share E-content, worksheets, training notes, exam resources and classroom activities.

Community focus

Connect teachers, students and parents with a more colorful and informative design.

Latest posts

Your Blogger posts appear here in a wider content area.

Tuesday, November 25, 2025

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை
வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி

டேனிஸ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

வகுப்பு: 7 | சேலம் மாவட்டம், கடையாம்பட்டி ஒன்றியம்

🏆

மாநில அளவில் இரண்டாம் இடம்!

வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி - 12.02.2025

சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம்

🔬 அறிவியல் கண்டுபிடிப்பு

  • மலையில் நிலச்சரிவு கண்காணிப்பு கருவி
  • காட்டுத்தீ பரவலை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி
  • இயந்திரகற்றல் (ML) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்
  • Microsoft Makecode & Microcontroller அடிப்படையில்

💡 எப்படி இந்த எண்ணம் தோன்றியது?

மாதந்தோறும் எங்கள் பள்ளியில் வானவில் மன்றம் மிக சிறப்பாக நடைபெறும். அப்போது நம் சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், வட்டார அளவில் நடைபெற உள்ள வானவில் மன்ற போட்டிகளில் கலந்து கொள்ளவும் தெரிவித்தனர்.

எங்கள் டேனிஸ்பேட்டை பள்ளி சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளதாலும், என் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள மலைகிராமத்தில் வாசிப்பதாலும் அங்கு கோடை காலத்தில் அடிக்கடி நடைபெறும் காட்டுத்தீ பற்றி அவ்வப்பொழுது கூறுவர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த கருவியை கண்டறியும் எண்ணம் உண்டானது.

👥 வழிகாட்டிகள்

திருமதி புவனா - தலைமை ஆசிரியை:
காலநிலை மாற்றம் குறித்தும், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி எங்களை ஊக்குவித்தார்.

திரு. தங்கராஜ் - வன சரக அலுவலர்:
டேனிஸ்பேட்டை வன சரக அலுவலர் எங்கள் திட்டத்தை எடுத்துரைத்தபோது பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

திரு. ஐய்யப்பன் - ஆசிரியர் பயிற்றுநர்:
Microsoft Makecode மூலம் எவ்வாறு மென்பொருள் உருவாக்குவது என்றும் அதனை எவ்வாறு Microcontroller களில் உள்ளீடு செய்து வெளியீடுகளை பெறுவது போன்ற பயிற்சிகளையும் வழிக்காட்டுதல்களையும் அளித்தார்.

📸 படத் தொகுப்பு

⚠️ முக்கியம்: மேலே உள்ள "YOUR_BLOGGER_IMAGE_URL_1" முதல் "YOUR_BLOGGER_IMAGE_URL_8" வரை உங்கள் உண்மையான படங்களின் URL களால் மாற்றவும்

🚀 எதிர்கால திட்டங்கள்

  • 📋 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பார்வைக்கு திட்டத்தை கொண்டுசெல்ல உள்ளோம்
  • 🏛️ தமிழக அரசு பெயரில் காப்புரிமை பெற முயற்சி
  • 🛰️ ISRO அனுமதியுடன் நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ நடைபெற அதிக வாய்ப்புள்ள இடங்களில் இந்த கருவியை பொருத்துதல்
  • 📱 பிரத்தியேக Mobile App வடிவமைப்பு (GPS & Cloud storage உடன்)
  • ⚡ உடனுக்குடன் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பு
  • 🌍 வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு (பரிசு)

🌟 சாதனைகள்

  • 38 மாவட்டங்களிலிருந்து 152 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி
  • சேலம் மாவட்டத்தில் முதலிடம்
  • மாநில அளவில் இரண்டாம் இடம்
  • பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடமிருந்து வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்
  • வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு

Sunday, October 12, 2025

Tuesday, January 2, 2024

இந்தியாவின் முதல் ஆசிரியை - சாவித்ரிபாய் பூலே

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் ஆசிரியை - 03 ஜனவரி - பிறந்த தினம்*
                                                                                                                                                                                                            “போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”                                                                                                       
   ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.
‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.

சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.

இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

 கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது.

 இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில் புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.

Friday, December 22, 2023

கணித மன்றம் தொடக்க விழா - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாப்பிசெட்டிப்பட்டி


இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பாப்பிசெட்டிபட்டியில் கணித மேதை சீனிவாச ராமானுசன் பிறந்தநாள் விழா தேசிய கணித தின விழா மற்றும் கணித மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவை  மதிப்பிற்குரிய காடையாம்பட்டி வட்டார கல்வி  அலுவலர்   திரு.சிரில் விக்டர் துவங்கி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.  ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி ஜெ ஜமுனா மற்றும் கி ஐய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் தலைமை ஆசிரியர் திருமதி கஸ்தூரி அவர்கள் வரவேற்புரை அளித்தார், கணித பட்டதாரி ஆசிரியர் திரு.திருக்குமரன் அவர்கள் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களுக்கு தங்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.அனைத்து மாணவச் செல்வங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.