Latest posts
Your Blogger posts appear here in the main content area.
Saturday, November 12, 2022
*தேசிய குழந்தைகள் தினம்* - 1புத்தகம்+2முகமூடி - அறிவியல் இயக்கம்
*தேசிய குழந்தைகள் தினம்* சிறப்பு செயல்பாடாக *நம்ம மாமா நேரு- ஆயிஷா இரா.நடராசன் & காந்தி என்னும் மகாத்மா - கமலாலயன் புத்தகம் ~₹60~ சலுகை விலை ₹30 (சலுகை விலை நவம்பர் 14 வரை பணம் செலுத்தி வாங்குபவர்களுக்கு மட்டும்) & முகமூடிகள் காந்தி மற்றும் நேரு தனித்தனியாக தலா ₹5*
*1புத்தகம்+2முகமூடி என மொத்தம்= ₹40*
தேவைகளுக்கு தங்கள் ஒன்றிய/ பகுதி கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
தங்கள் பகுதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை நண்பர்களின் தொடர்பு எண் தகவல்களுக்கு 9486596174 (மாவட்ட பொருளாளர்)
புத்தக அறிமுகம், புத்தக வாசிப்பு இயக்கம் என தங்கள் பள்ளி / பகுதி / வீடுகளில் முன்னெடுக்க வாழ்த்துக்கள் 🤝
NMMS - செருகபட்ட படங்கள்- எண் விபரங்கள்
Ans: 9
ii) படித்த, பின்தங்கியவர்கள் எத்தனை பேர் ?
Ans: 14
iii) பின்தங்கிய படிக்காத, வேலையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
Ans : 5
iv) படிக்காத பின்தங்கியவர்கள் எத்தனை பேர்?
Ans: 17+5 = 22
Sunday, September 4, 2022
ITK மையத்தில் -ஆசிரியர் தின கொண்டாட்டம்
Click 👇👇👇
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் காஞ்சநாயக்கன்பட்டி குறுவளமையத்திற்கு உட்பட்ட 330803512 எண் கொண்ட இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது
படைப்பாற்றல், தைரியம் மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டாடுங்கள்!
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஆற்றலையும் திறனையும் கற்பனை செய்து பாருங்கள், படைப்பாற்றல் ஊக்குவிக்கும் மற்றும் அழைக்கும் அனைத்தையும் இணைத்து, ஒத்துழைத்து, உருவாக்கி கொண்டாடுங்கள். அவர்களின் திறமைகள், பரிசுகள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, உலகை ஒரு சிறந்த இடத்திற்கு நகர்த்துவதற்காக, படைப்பாற்றல் சாம்பியன்களின் வளர்ந்து வரும் உலகளாவிய சமூகத்தில் நீங்கள் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போதே பதிவு செய்து, செப்டம்பர் 15 அல்லது அதைச் சுற்றி டாட் டேயைக் கொண்டாடுங்கள் - உங்கள் செய்திகள், புகைப்படங்கள், கலை மற்றும் வீடியோக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்!
peter_reynolds_signature_new.png
தொடங்குங்கள்
சர்வதேச புள்ளி தினம், படைப்பாற்றல், தைரியம் மற்றும் ஒத்துழைப்பின் உலகளாவிய கொண்டாட்டம், ஆசிரியர் டெர்ரி ஷே தனது வகுப்பறையை பீட்டர் எச். ரெனால்ட்ஸ் புத்தகமான தி டாட் செப்டம்பர் 15, 2009 அன்று அறிமுகப்படுத்தியபோது தொடங்கியது.
தி டாட் என்பது அக்கறையுள்ள ஒரு ஆசிரியரின் கதையாகும், அவர் சந்தேகத்திற்குரிய மாணவனை "தனது முத்திரையை" பதிக்கும் அளவுக்கு தைரியமாக இருப்பதன் மூலம் தனது சொந்த திறன்களை நம்பத் துணிகிறார். ஒரு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய புள்ளியுடன் தொடங்குவது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தில் ஒரு திருப்புமுனையாக மாறும், சுய கண்டுபிடிப்பு மற்றும் பகிர்வுக்கான பயணத்தைத் தூண்டுகிறது, இது உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஊக்குவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புள்ளி தினத்தில் - உங்களைப் போன்றவர்களின் உதவியுடன் - உத்வேகம் தொடர்கிறது. ஒரு புத்தகத்தின் பக்கங்களில் ஒரு கதையாகத் தொடங்கியது, உலகெங்கிலும் கற்பித்தல் மற்றும் கற்றலை மாற்றியமைக்கிறது, எல்லா வயதினரும் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் படைப்பாற்றலின் ஆற்றலையும் திறனையும் மீண்டும் கண்டுபிடிப்பார்கள்.
Thanks : https://www.internationaldotday.org/
Monday, August 8, 2022
நிக்கலாய் போக்டனவ் பெல்ஸ்கி
Nikolay Bogdanov-Belsky .
நிக்கலாய் போக்டனவ் பெல்ஸ்கி,
இவர் ஒரு ரஷ்ய ஒவியர் ( 1868 - 1945).
இவர் Rachinskiy என்னும் கணித ஆசிரியர் வகுப்புக்கு 1895 ஆம் ஆண்டு செல்கிறார். சென்று பார்த்த காட்சியை Mental Arithmetic.
In the Public School என்ற தலைப்பில் ஒவியமாக வரைந்துள்ளார்.
அதாவது 123 வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தத்ரூபமாக பெல்ஸ்கி வரைந்துள்ளார்.
இதில் இருக்கும் ஒவ்வொரு மாணவரின் முகத்தில் தெரியும் ஆர்வத்தைப் பாருங்கள்.
நம் தாத்தாவின் அப்பா வயதுள்ள கேரக்டர்கள் தான் இந்த ஒவியத்தில் இருக்கிறார்கள் 123 வருடங்கள் முன்பு வாழ்ந்த டீன் ஏஜ் சிறுவர்களின் கணித ஆர்வத்தை பாருங்கள். அவர்கள் முகபாவனைகளை Zoom செய்து பாருங்கள்.
அடுத்து கரும்பலகையில் உள்ள கணக்கைப் பாருங்கள்.
(10² + 11² + 12 ² +13² + 14² )/ 365 என்றிருக்கிறது .
இதன் விடை
(100 + 121 + 144 + 169 + 196 ) / 365
730 / 365 = 2
இதை இப்படி எளிய கணக்காக கொள்ள முடியாது. அதற்கு Rachinskiy Sequence பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
3²+ 4² = 5² = 25
இங்கே 3,4,5 மூன்றும் அடுத்தடுத்து வரும் எண்கள்.
அவற்றின் வர்க்கத்துக்கு (Square) உள்ள தொடர்பைதான் இது குறிக்கிறது.
இது போல 10² + 11² + 12 ² = 13² + 14² ஆகும்.
10 ,11 ,12,13,14,15 வருகிறது. அதில் 10 ,11 , 12 எண்களின் வர்க்கத்தின் (Square) கூட்டுத்தொகை அதற்கடுத்து வரும் 12,13 எண்களின் வர்க்கத்தின் கூட்டுதொகைக்கு சமமாக இருக்கிறது.
10² + 11² + 12 ² = 13² + 14² = 365
இதைத்தான் 10² + 11² + 12 ² +13² + 14² / 365 என்று கொடுத்தார் Rachinskiy. அப்படி பார்க்கும் போது
365 + 365 / 365 = 2 என்று வரும்.
வேறு Rachinskiy வரிசை எண்கள் வருமாறு.
21² + 22² + 23² + 24² = 25² + 26² + 27² = 2030
36² + 37² + 38² + 39² + 40² = 41² + 42² + 43² + 44² = 7230
இந்த கணக்கை விடுங்கள்.
ஒரு ஒவியர் ஒரு கணித ஆசிரியர் வகுப்புக்கு சென்று அதில் உள்ள மாணவர்களின் ஆர்வத்தை ஒவியமாக வரைகிறார்.
அது எவ்வளவு பெரிய விஷயம். ரஷ்ய சமூகத்திற்கு அறிவியல் கணிதம் மேல் இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறதல்லவா.
Subscribe to:
Posts (Atom)
.jpg)
