Latest posts
Your Blogger posts appear here in the main content area.
Monday, August 23, 2021
6-8 கணித பாட காணொலிகள் (TN-KTK(கல்வித்தொலைக்கட்சி))
மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆணைப்படி நமது காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு worksheet தயாரிக்க 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள கணித பாடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்த worksheet ஆனது இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 6-8 பாடங்களை மாணவர்கள் பார்த்து எந்த அளவுக்கு புரிந்துகொண்டுள்ளனர் என்பதை மதிப்பீடு செய்யும் பொருட்டு இந்த பணியானது வழங்கப்பட்டுள்ளது .
ஆகவே 25 நடுநிலைப்பள்ளியில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயன்படும் KTK-6-8 MATHS PLAYLISTS இங்கே வழங்கியுள்ளேன். அவற்றை பார்த்து பணித் தாள்களை (worksheets) தாயரித்து தயார்நிலையில் வைக்கவும் , இப்பணிக்கு அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.
6th mathematics
7th mathematics
8th mathematics
Sunday, August 15, 2021
காமராசர் 119 ஆவது பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)-வினாடி வினா
"காமராசர் 119 ஆவது பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)-
வினாடி வினா" ....
Wednesday, August 11, 2021
OOSC SURVEY
இன்று (10.08.2021) ஊ ஒ தொ பள்ளி வே.மேட்டூர் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாராகல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் அவர்கள் பார்வை
இன்று (10.08.2021) ஊ ஒ தொ பள்ளி எட்டால் காடு, பள்ளியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பார்வை .உடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஐயா அவர்கள், அம்மா அவர்கள், மேற்பார்வையாளர் அவர்கள்.
Tuesday, August 10, 2021
சர்வதேச அளவிலான விண்கற்களை கணடறிவதற்கான - பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிபட்டறை
சர்வதேச அளவிலான விண்கற்களை கணடறிவதற்கான - பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிபட்டறை
அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து விண்கற்களை கண்டறிய ஆர்வம் உள்ளதா? ஹவாய் நோக்குகூடம் (Hawaii Observatory), சர்வதேச வானவியல் தேடுதல் கூடுகை (International Astronomical Search Collaboration) இணைந்து விண்கற்களை கண்டறிவது மற்றும் பெயரிடுவது குறித்த பயிற்சி வழங்க்கபடும். ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை நடத்திட திட்டமிட்டுள்ளோம். ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம். பங்கு பெறும் அனைவருக்கும் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிபட்டறை கட்டணம்: Rs.1000 (இந்த கட்டணம் மென்பொருள், பயிற்சி கையேடு, மின்னனு தளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்கும் ஆசிரியர் இதே திட்டத்தை தனது மாணவர்களுக்கு (குறைந்த பட்சம் 3 மாணவர்கள், அதிகப்பட்சம் 5 மாணவர்கள்) கொண்டுசெல்ல வேண்டும். அப்படி பங்கேற்கும் மாணவர்களுக்கான மென்பொருள் பதிவுக் கட்டணம் Open Space Foundation மூலமாக பங்களிப்பாக வழங்கப்படும்). மாணவர்களுக்கு கொண்டு செல்வது கட்டாயமானது இல்லை. முயற்சிக்கும் ஆசிரியர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: www.csterc.com
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு விண்டோஸ் இயங்கு தளத்துடன் கூடிய கணினி அவசியம். (மொபைல் போன் மூலமாக பங்கேற்க முடியாது.
குறிப்பு: பதிவு செய்தவர்களுக்கான பதிவு எண்ணுடன் கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும்.
Subscribe to:
Posts (Atom)
