Friday, April 29, 2022

காணொளிக்காட்சி கூட்டம்- பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு

 






சேலம் மாவட்டத்தில் 50% தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 30.04.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

*முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் மேற்காண் பொருள் சார்பான காணொளிக்காட்சி கூட்டம் இன்று (27.04.2022) பிற்பகல் 03.30 மணிக்கு* நடைபெற்றது

*அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ள தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள்* ஆகியோர் *சார்ந்த வட்டார வள மையத்திலிருந்து(BRC) மேற்கண்ட காணொளி காட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்

Tuesday, April 26, 2022

கணித மேதை ராமானுஜன் நினைவு தினம்.*

 *ஏப்ரல் 26*


*கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் நினைவு தினம்.* 



கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்



அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .



அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .


எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட் ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”


ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.


அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன..



எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.


அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

Saturday, April 23, 2022

ஒன்றிய நடுநிலைப்பள்ளி டேனிஸ்பேட்டை - பள்ளி மேலாண்மைக்குழு மறுசீரமைப்பு நிகழ்ச்சி



       

       இன்று (23.04.2022 )சேலம் மாவட்டம்,  காடையாம்பட்டி ஒன்றியம், டேனிஸ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை கழு மறுசீரமைப்பு நிகழ்ச்சியானது சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

      முன்னதாக பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு நிகழ்விற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மிக சிறப்பான ஒரு ஏற்பாட்டை அமைத்திருந்தனர் பள்ளியின் மைதானத்தில் சாமினோ பந்தல் அமைக்கப்பட்டு பங்கேற்பாளர்கள் அமர்வதற்கான இட வசதி ,குடிநீர் வசதி மற்றும் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

      பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் அம்மா அவர்கள் பள்ளியின் பெற்றோர் உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கல்வியாளர் சுய உதவி குழு உறுப்பினர் ஆகியோரை பள்ளியின் சார்பாக SMC மறுசீரமைப்பு நிகழ்விற்கு இனிதே வரவேற்றார்கள்.

         அடுத்ததாக பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு உறுப்பினர்கள் தேர்வு குறித்தும் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

     பின்னர் கால அட்டவணையின் படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் .அவர்களுக்கு தேர்வு சான்றிதழ் பெற்றுக் கொண்டு  பள்ளி மேலாண்மைக் குழு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

      உறுப்பினர்கள் அனைவருக்கும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு மறுசீரமைப்பு நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கே.என் புதூர் - பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு (SMC RECONSTITUTION )






இன்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் , கே.என். புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு நிகழ்ச்சியானது மிக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் அனைத்து பெற்றோர் உறுப்பினர்களையும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை பள்ளியின் சார்பாக இனிதே வரவேற்றார்
பின்னர் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் தண்டபாணி அவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு  நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.
பின்னர் மறுசீரமைப்பு நிகழ்வானது வழங்கப்பட்ட கால அட்டவணையின் படி முறையாகவும் மதிப்பிற்குரிய மாநில திட்ட அலுவலர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் 20 உறுப்பினர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு ,தங்கள் பதவியை பள்ளி மேலாண்மைக்குழு உறுதிமொழியுடன் முறையாக ஏற்றுக்கொண்டனர். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்களுக்கு அவர்களின் பொறுப்புகளும் கடமைகளும் குறித்து எடுத்துரைக்கப்பட்டது . குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வை வீராட்சியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் SMC கருத்தாளர் ஆகிய இளவரசன் ஐயா அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராகவும் கவன ஈர்ப்பு பார்வையாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் சீரிய முறையில் வழிகாட்டி உதவினார். இந்த நிகழ்வில் அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றும் அனைவரும் ஆர்வமுடன் முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

TEN BENEFITS OF TEACHING POETRY (list created by Sarah Landis)

கவிதை கற்பிப்பதன் 10 நன்மைகள்

கவிதை பெரும்பாலும் ஆசிரியரின் குரலை ஒளிரச் செய்கிறது, இதனால் உள் வெளிப்பாட்டின் மீது ஒளி வீசுகிறது!

1. கவிதைகள் உரைகளை ஆழமாக/நெருங்கிய வாசிப்பை ஊக்குவிக்கிறது, மேலும் அனுமானம் மற்றும் விளக்கம் போன்ற சிந்தனை திறன்களை வளர்க்க உதவும்.மேலும் அறிய

2. கவிதையானது கதை சொல்லும் கூறுகளை வேறு வகையின் மூலம் கற்பிக்கிறது.

3. கவிதையைச் சுற்றி வார்த்தைகள் குறைவாகவும், அதிக 'வெள்ளை இடமும்' இருப்பதால், நீண்ட நூல்களுடன் போராடும் மாணவர்களை கற்றலில் நுழையுமாறு கவிதை அழைக்கிறது. மிகக் குறைவான மற்றும் பார்வைக்கு ஈர்க்கக்கூடியது! ஜேசன் ரெனால்ட்ஸ் எழுதிய ஒவ்வொருவருக்கும்

4. சுருக்கமான மொழியைக் கற்பிக்கும் கவிதை அருமை. மாணவர்கள் எப்போது நீண்ட நேரம் எழுத வேண்டும் மற்றும் எப்போது சிறியதாக எழுத வேண்டும் என்று பயிற்சி செய்கிறார்கள்.

5. இசை/வரலாறு போன்ற பிற துறைகளுடன் கவிதை இணைக்கிறது. 6. கவிதை ஒரு செயல்திறன் சார்ந்த வகையாக இருக்கலாம். (கவிதையை சிந்தியுங்கள்

வாசிப்பு மற்றும் கவிதை ஸ்லாம்கள்.)

7. குழந்தைகள் அர்த்தத்தைப் பற்றி பேசுவதற்கு கவிதை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ('கோட்டை உயர்த்துவது', ஒரு தீம் விவாதம், மீன் கிண்ணம் மற்றும் பிற செயல்பாடுகளைப் பற்றி சிந்தியுங்கள்)

8. கவிதை ரைமை அறிமுகப்படுத்தலாம் -- நுழைவு புள்ளிகளில் ஒன்று

வெளிவரும் வாசகர்கள்.

9. கவிதை காலமற்றது! (ஷேக்ஸ்பியர் மற்றும் மாயா ஏஞ்சலோ போன்ற இறந்த கவிஞர்களுக்கும், அமண்டா கோர்மன் போன்ற வாழும் கவிஞர்களுக்கும் கற்பிக்கவும்)

சாரா லாண்டிஸ் உருவாக்கிய பட்டியல்

ADD