இன்று (23.04.2022 )சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், டேனிஸ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை கழு மறுசீரமைப்பு நிகழ்ச்சியானது சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
முன்னதாக பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு நிகழ்விற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மிக சிறப்பான ஒரு ஏற்பாட்டை அமைத்திருந்தனர் பள்ளியின் மைதானத்தில் சாமினோ பந்தல் அமைக்கப்பட்டு பங்கேற்பாளர்கள் அமர்வதற்கான இட வசதி ,குடிநீர் வசதி மற்றும் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் அம்மா அவர்கள் பள்ளியின் பெற்றோர் உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கல்வியாளர் சுய உதவி குழு உறுப்பினர் ஆகியோரை பள்ளியின் சார்பாக SMC மறுசீரமைப்பு நிகழ்விற்கு இனிதே வரவேற்றார்கள்.
அடுத்ததாக பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு உறுப்பினர்கள் தேர்வு குறித்தும் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பின்னர் கால அட்டவணையின் படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் .அவர்களுக்கு தேர்வு சான்றிதழ் பெற்றுக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு மறுசீரமைப்பு நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment