Saturday, April 23, 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கே.என் புதூர் - பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு (SMC RECONSTITUTION )






இன்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் , கே.என். புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு நிகழ்ச்சியானது மிக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் அனைத்து பெற்றோர் உறுப்பினர்களையும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை பள்ளியின் சார்பாக இனிதே வரவேற்றார்
பின்னர் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் தண்டபாணி அவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு  நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.
பின்னர் மறுசீரமைப்பு நிகழ்வானது வழங்கப்பட்ட கால அட்டவணையின் படி முறையாகவும் மதிப்பிற்குரிய மாநில திட்ட அலுவலர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் 20 உறுப்பினர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு ,தங்கள் பதவியை பள்ளி மேலாண்மைக்குழு உறுதிமொழியுடன் முறையாக ஏற்றுக்கொண்டனர். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்களுக்கு அவர்களின் பொறுப்புகளும் கடமைகளும் குறித்து எடுத்துரைக்கப்பட்டது . குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வை வீராட்சியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் SMC கருத்தாளர் ஆகிய இளவரசன் ஐயா அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராகவும் கவன ஈர்ப்பு பார்வையாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் சீரிய முறையில் வழிகாட்டி உதவினார். இந்த நிகழ்வில் அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றும் அனைவரும் ஆர்வமுடன் முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

No comments:

Post a Comment

ADD