Tuesday, November 25, 2025

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை
வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி

டேனிஸ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

வகுப்பு: 7 | சேலம் மாவட்டம், கடையாம்பட்டி ஒன்றியம்

🏆

மாநில அளவில் இரண்டாம் இடம்!

வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி - 12.02.2025

சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம்

🔬 அறிவியல் கண்டுபிடிப்பு

  • மலையில் நிலச்சரிவு கண்காணிப்பு கருவி
  • காட்டுத்தீ பரவலை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி
  • இயந்திரகற்றல் (ML) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்
  • Microsoft Makecode & Microcontroller அடிப்படையில்

💡 எப்படி இந்த எண்ணம் தோன்றியது?

மாதந்தோறும் எங்கள் பள்ளியில் வானவில் மன்றம் மிக சிறப்பாக நடைபெறும். அப்போது நம் சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், வட்டார அளவில் நடைபெற உள்ள வானவில் மன்ற போட்டிகளில் கலந்து கொள்ளவும் தெரிவித்தனர்.

எங்கள் டேனிஸ்பேட்டை பள்ளி சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளதாலும், என் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள மலைகிராமத்தில் வாசிப்பதாலும் அங்கு கோடை காலத்தில் அடிக்கடி நடைபெறும் காட்டுத்தீ பற்றி அவ்வப்பொழுது கூறுவர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த கருவியை கண்டறியும் எண்ணம் உண்டானது.

👥 வழிகாட்டிகள்

திருமதி புவனா - தலைமை ஆசிரியை:
காலநிலை மாற்றம் குறித்தும், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி எங்களை ஊக்குவித்தார்.

திரு. தங்கராஜ் - வன சரக அலுவலர்:
டேனிஸ்பேட்டை வன சரக அலுவலர் எங்கள் திட்டத்தை எடுத்துரைத்தபோது பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

திரு. ஐய்யப்பன் - ஆசிரியர் பயிற்றுநர்:
Microsoft Makecode மூலம் எவ்வாறு மென்பொருள் உருவாக்குவது என்றும் அதனை எவ்வாறு Microcontroller களில் உள்ளீடு செய்து வெளியீடுகளை பெறுவது போன்ற பயிற்சிகளையும் வழிக்காட்டுதல்களையும் அளித்தார்.

📸 படத் தொகுப்பு

⚠️ முக்கியம்: மேலே உள்ள "YOUR_BLOGGER_IMAGE_URL_1" முதல் "YOUR_BLOGGER_IMAGE_URL_8" வரை உங்கள் உண்மையான படங்களின் URL களால் மாற்றவும்

🚀 எதிர்கால திட்டங்கள்

  • 📋 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பார்வைக்கு திட்டத்தை கொண்டுசெல்ல உள்ளோம்
  • 🏛️ தமிழக அரசு பெயரில் காப்புரிமை பெற முயற்சி
  • 🛰️ ISRO அனுமதியுடன் நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ நடைபெற அதிக வாய்ப்புள்ள இடங்களில் இந்த கருவியை பொருத்துதல்
  • 📱 பிரத்தியேக Mobile App வடிவமைப்பு (GPS & Cloud storage உடன்)
  • ⚡ உடனுக்குடன் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பு
  • 🌍 வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு (பரிசு)

🌟 சாதனைகள்

  • 38 மாவட்டங்களிலிருந்து 152 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி
  • சேலம் மாவட்டத்தில் முதலிடம்
  • மாநில அளவில் இரண்டாம் இடம்
  • பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடமிருந்து வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்
  • வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு

Thursday, November 13, 2025

Smart Vision for a Cleaner Ocean

SMART VISION FOR A CLEANER OCEAN — Vanavil Mandram 2025
VANAVIL MANDRAM — 2025
Focal Theme: Local Solutions for Global Challenges
Sub-theme: Scientific Solutions to Environmental Challenges – Plastic Pollution
Motto: “A clean ocean begins with a clear vision.”

🌊 SMART VISION FOR A CLEANER OCEAN
“See. Sense. Save — Using Smart Vision to Keep Our Oceans Blue.”

Status: idle
Label: --
Model: local
© Vanavil Mandram • SMART VISION FOR A CLEANER OCEAN — Showcase 2025

Sunday, October 12, 2025

Tuesday, January 2, 2024

இந்தியாவின் முதல் ஆசிரியை - சாவித்ரிபாய் பூலே

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் ஆசிரியை - 03 ஜனவரி - பிறந்த தினம்*
                                                                                                                                                                                                            “போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”                                                                                                       
   ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.
‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.

சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.

இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

 கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது.

 இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில் புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.

Friday, December 22, 2023

கணித மன்றம் தொடக்க விழா - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாப்பிசெட்டிப்பட்டி


இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பாப்பிசெட்டிபட்டியில் கணித மேதை சீனிவாச ராமானுசன் பிறந்தநாள் விழா தேசிய கணித தின விழா மற்றும் கணித மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவை  மதிப்பிற்குரிய காடையாம்பட்டி வட்டார கல்வி  அலுவலர்   திரு.சிரில் விக்டர் துவங்கி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.  ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி ஜெ ஜமுனா மற்றும் கி ஐய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் தலைமை ஆசிரியர் திருமதி கஸ்தூரி அவர்கள் வரவேற்புரை அளித்தார், கணித பட்டதாரி ஆசிரியர் திரு.திருக்குமரன் அவர்கள் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களுக்கு தங்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.அனைத்து மாணவச் செல்வங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.

Sunday, April 23, 2023

ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா - STEM கருத்தாளர்கள்

Million of Science Festival:

நாளை 25.04.2023 ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா ஆனது வட்டார வள  மையம் காடையாம்பட்டியில் நடைபெற உள்ளது .
இந்த பயிற்சியில் காடையாம்பட்டி  வட்டாரத்தை சேர்ந்த 30 இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு STEM கருத்தாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர் . அது சார்ந்த முன்னேற்பாடு கூட்டம் இன்று BRC யில் மேற்பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது .



Time table

Tuesday, April 18, 2023

கணவாய்புதூர் KGBV பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள்


    நேற்று 17.04.2023  கணவாய்புதூர் KGBV பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது . அறிவியல் கண்காட்சியை மதிப்பிற்குரிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின் போது 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிபடுத்தி விளக்கமளித்தனர் மேலும் ஆசிரியர் பயிற்றுனர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பிறகு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை பள்ளியின் NGO அவர்கள் தொடங்கி வைத்தார் . மாணவிகள் கோகோ உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர் . மேலும் இந்நிகழ்வின் போது பள்ளியின் ஆசிரியைகள் உடனிருந்தனர்.பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மேற்பார்வையாளர் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.



Saturday, April 15, 2023

UG TRB Maths - Unit wise - Study Material

UG TRB Maths - Unit - 1 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 2 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 3 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 4 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 5 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 6 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 7 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 8 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit - 9 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here
UG TRB Maths - Unit -10 Study Material English Medium | e-Maths and Science Academy  -PDF Download Here

Friday, April 14, 2023

ஏப்ரல் 15 _ இன்று

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*ஏப்ரல் 15 – 1452 - உலகப்புகழ்பெற்ற ஓவியரும் இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக் கலைஞரும், பல்துறை மேதையுமான லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பிறந்த தினம்* 
# இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார் (1452). தந்தை ஆவண எழுத்தர். மகனுக்கு கணிதம், வடிவியல், லத்தீன் மொழி ஆகிய வற்றை வீட்டிலேயே கற்பிக்க ஏற்பாடு செய்தார். 14-வது வயதில் அவனுக் குக் கலைகளில் நாட்டம் இருப்பதை அறிந்து அவற்றில் பயிற்சி பெறுவதற்காக ஒரு புகழ்பெற்ற கலைஞரிடம் அனுப்பி வைத்தார்.
# அங்கே உலோகப்பூச்சு, தச்சு வேலை, வேதியியல், பெயின்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் டாவின்சி பயிற்சி பெற்றார். கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க் கையின் யதார்த்த நிலைகளை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.1482-ல் மிலான் போர்ப் பொறியாளராக இவர் நியமிக்கப்பட்டார். வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங் களை வடிவமைத்து உருவாக்கினார். நகர அமைப்பாளராகவும், கட்டிடவியல் துறையிலும் சேவையாற்றினார். தெருக்கள், கால்வாய்கள், புறநகர்ப் பிரிவுகள், மக்கள் குடியிருப்புகள் எனப் பல்வேறு நகர்ப் பகுதிகளையும் வடிவமைத்துக் கொடுத்தார். 
# உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1495-ல் வரையத் தொடங்கி, 1498-ல் நிறைவு செய்தார். 1503-ல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார.
# மிலான் நகர் சென்ற இவருக்கு தேவாலயத்தில் ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னி மேரி ஓவியத்தை வரைந்தார். 1513-ல் ரோம் நகர் சென்றார். அங்கு மன்னர் இவருக்கு ஓய்வூதியம் வழங்கி அங்கேயே இருக்கும்படி கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏராளமான ஓவியங்களை வரைந்தார். 
# பல இயந்திரங்களை வடிவமைத்தார். நீர்க் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். ஓவியக்கலையின் பிதாமகர், தத்துவமேதை, வானியல் விஞ்ஞானி, பொறியியலாளர், கட்டிட நிபுணர், ராணுவ ஆலோசகர், கடல் ஆராய்ச்சியாளர், நீர்ப்பாசன நிபுணர், சிறந்த சிற்பி, கவிஞர், இசை விற்பன்னர் எனப் பல்வேறு களங்களில் செயல்பட்டார்.
# மனித உடற்கூறுகளைத் துல்லியமாக வரைந்தார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்தன. இவர் விட்டுச் சென்ற குறிப்பேடுகளில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன கண்டுபிடிப்புகளின் சித்திரங்கள் காணப்பட்டன.
# ஓவியம் உள்ளிட்ட 9 வகையான கலைகளைக் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் திறன் பெற்றிருந்த இவர் இடதுகைப் பழக்கம் கொண்டவர். வலப்பக்கமாகத் தொடங்கி இடது பக்கமாக எழுதுவார். இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
 # மாபெரும் விஷயங்களைத் தொடங்குவார். ஆனால் அதை முடிக்கும் முன்பாகவே வேறு ஒன்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார். இவரது நிறைய ஓவியங்கள் முடிக்கப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
# மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள், காலத்தை வென்ற படைப்பாளி என இவர் பெருமை பாடுகின்றன. உலகம் போற்றும் உன்னதக் கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதை எனப் போற்றப்பட்டவருமான லியானார்டோ டா வின்சி 1519-ம் ஆண்டு மே மாதம் 67-வது வயதில் மறைந்தார்.

Tuesday, April 11, 2023

கனரா இணைய வங்கி தளத்தில் statement, receipt and payment விவரங்கள் எடுக்கும் முறை மற்றும் தேதி வாரியாக விடுவிக்கப்பட்ட தொகை விவரம்


1. For Canara bank RECEIPT details 

Maker login - report - budget allocation - component wise allocation - from - to ( 10 days period only from 19.10.22) - account number no - fetch



2. FOR CANARA BANK PAYMENT details 

Maker login - Transaction status - Transaction report - from - to ( one month period only ) - account no - fetch .


3. For canara bank ACCOUNT STATEMENT


Maker login - report - account statement - statement - from - to ( one year ) - fetch.

Sunday, April 9, 2023

SALM கற்பித்தலில் மாணவர்களை கவரும் கற்பித்தல் பைகள் - ஆசிரியை அசத்தல் ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவவர்களுக்கு, கற்றல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி, இடைநிற்றல் இல்லாமல் அவர் களை பள்ளிக்கு வரவைக்க, பல்வேறு புதுமைகளை ஆசிரி யர்கள் அறிமுகப்படுத்தி வரு கின்றனர். அந்த வகையில், மாணவர்களே கையாளும் சுய வருகை பதிவேடு, கற்றல் உபகரணங்கள் அடங்கிய வகுப் பறை கற்பித்தலில் சேலத்தை சேர்ந்த ஆசிரியை அசத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட பெரியவடகம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. செயல்பட்டு வருகிறது. சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னராஜனின் ஒப்புதலுடன், இடைநிலை ஆசிரியை நித்யா, மாணவர்களுக்காக பல்வேறு புதுமை நடவடிக்கைகளை அறி முகப்படுத்தி, வெற்றி கண்டுள் ளார். இதற்காக, ஆன்லைன் கல்வி ரேடியோவின் இளம் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று
அசத்தி வருகிறார். இதுகுறித்து இடைநிலை ஆசிரியை நித்யா கூறியதாவது:

எனது வகுப்பறையில் மாணவர்களின் வருகையை, தாங்களே பதிவு செய்யும் வகை யில், சுயவருகை பதிவேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கையாளுவதற்கு எளிமையாக, அவரவரின் கீழ்மட்டக் கரும்பலகையில், ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு பைகள் ஒட்டப்பட்டுள் ளது. அதில் ஒவ்வொரு நாள் காலையிலும், மாணவர்கள் தாங்கள் பள்ளி வகுப்பறைக் குள் வந்தவுடன், அவர்களுடைய பதிவேட்டினை எடுத்து வருகையை பதிவு செய்வர். முந்தைய நாள் வருகை புரியாத மாணவர், முந்தைய நாளுக் கான பதிவேட்டில் ஆப்சென்ட் என பதிவிடுவர். கற்பித்தலின் போது, மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், கற்பித்தல் உபகரணங்களை முன்கூட்டியே தயார் செய்து. இந்த கற்பித்தல் பைகளில் வைப்பது என் வகுப்பறையின் மற்றொரு புதுமையான செயல் பாடு. ஒவ்வொரு பாடத்திற்கும் 5 விதமான பைகள் ஒட்டி, உபகர ணங்கள் பராமரிக்கப்படுகிறது. உபகரணங்கள் எப்பொழுதும்
அந்தப் பைகளில் இருப்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் நானும், மாணவர்களும் எடுத்து பயன்படுத்த ஏதுவாக உள் ளது. இதனால் கற்பித்தலின் போது நம்பிக்கை ஏற்படுகி றது. தமிழில் ஒரு நிமிட கதை, பாடல், விடுகதைகள், ஆங்கில ஆ வார்த்தைகள், கதைகள், பாடல் கள் போன்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம், மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அத்துடன் மாணவர்கள் வாசிப்பதை பதிவு செய்து, ஆன்லைன் கல்வி ரேடியோ, வானொலிக் கல்வி போன்ற தளங்களில் பதிவிடு கிறோம். மாணவர்கள் தங்கள் குரலை ரேடியோவில் கேட்பத னால், மேலும் ஆர்வத்துடன் வாசிக்க முயல்கின்றனர். வார்த்தை அட்டைகளை
உருவாக்கி 5 முதல் 10 அட்டை
கலை, அந்தப் பைகளில் இருப்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் நானும், மாணவர்களும்.எடுத்து பயன்படுத்த ஏதுவாக உள்ளது. இதனால் கற்பித்தலின் போது நம்பிக்கை ஏற்படுகி றது. தமிழில் ஒரு நிமிட கதை, பாடல், விடுகதைகள், ஆங்கில வார்த்தைகள், கதைகள், பாடல் கள் போன்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம், மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பதை கண்கூ டாக பார்க்க முடிகிறது. அத்துடன் மாணவர்கள் வாசிப்பதை பதிவு செய்து, ஆன்லைன் கல்வி ரேடியோ, வானொலிக் கல்வி போன்ற தளங்களில் பதிவிடு கிறோம். மாணவர்கள் தங்கள் குரலை ரேடியோவில் கேட்பத னால், மேலும் ஆர்வத்துடன் வாசிக்க முயல்கின்றனர்.

இதன்மூலம் மெல்ல கற்கும் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் வாசித் தல் திறன் மேலோங்கியதை உணர முடிந்தது. விளையாட்டு செயல்பாடுகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்ற விதம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவ ருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடியது. அவர்களின் ஒற்றுமையை அதிகரிக்கச் செய் தது. இவ்வாறு ஆசிரியை நித்யா தெரிவித்தார்.
நன்றி : 10.04.2023 தினகரன் (paper page no 4 )

Saturday, April 8, 2023

KEELADI MUSEUM APP(கீழடி அருங்காட்சியகம் செயலி)


  
கீழடி அருங்காட்சியகம் மொபைல் செயலி என்பது டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களை அணுக பயனர்களை அனுமதிக்கிறது.  அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் மற்றும் கலைப்பொருட்கள் மற்றும் இந்த பொருட்களின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பற்றிய தகவல்களை இந்த பயன்பாடு வழங்குகிறது.  பயனர்கள் தங்கள் அருங்காட்சியகத்திற்கு வருகையைத் திட்டமிடவும், வரைபடங்கள் மற்றும் திசைகளை அணுகவும் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.  கூடுதலாக, அருங்காட்சியகத்தில் பயனரின் அனுபவத்தை மேம்படுத்த, வினாடி வினாக்கள் அல்லது கேம்கள் போன்ற ஊடாடும் அம்சங்களையும் இந்த செயலி வழங்கலாம்.

Wednesday, February 15, 2023

Monday, December 19, 2022

வானியல் அற்புதங்கள் - இணையவழி கலந்துரையாடல்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,*
*சேலம் மாவட்டம்.*

*இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி*

நாள்: (இன்று) 20/12/2022
நேரம்: மாலை 6:30 மணிக்கு


*"வானியல் அற்புதங்கள்*"

கருத்தாளர்:
*திருமிகு. ஜெயமுருகன்,*
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

*திருமிகு. சத்தியமூர்த்தி*
மாவட்ட துணைத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
சேலம்.

அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

ஜூம் செயலி மூலம் நிகழ்வில் இணைய

Topic: TNSF MEET
Time: Dec 20, 2022 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 861 7511 9892

Wednesday, December 14, 2022

அரசு உயர்நிலைப்பள்ளி கொங்குப்பட்டியில் - போதைபொருள் தடுப்பு மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு










நேற்று அரசு உயர்நிலைப்பள்ளி கொங்குப்பட்டி JRC சார்பாக போதைபொருள் தடுப்பு மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக தீவட்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் ... 

Saturday, November 19, 2022

சர்வதேச குழந்தைகள் தினம் 2022

 

நவம்பர் 20- சர்வதேச குழந்தைகள் தினம். இந்த ஆண்டின் Theme - Inclusion, For Every Child. ஒரு குழந்தையும் விடுபடாமல் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பது. அனைவருக்குமான சமத்துவமான உலகத்திற்காக நவம்பர் 20 அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். குழந்தைகளிடம் இது குறித்தான உரையாடல்களை நிகழ்த்துவது அவசியம். வெவ்வேறு உப தலைப்புகளிலும் இதனைப்பற்றி பேச வேண்டும்.


மொழி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து குழந்தைகளின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல், கலாச்சார, குடியுரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் ஐநா சபை 1989 நவம்பர் 20 அன்று தீர்மானம் இயற்றியது, அன்று முதலே நவம்பர் 20, சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.


நம் வீடுகளில், வகுப்பறைகளில், வீதிகளில், கிடைக்கும் தளங்களில் எல்லாம் அனைவரையும் உள்ளடக்கிய உலகம் பற்றி குழந்தைகளிடம் பேசுவோம். அவர்கள் நம்மைவிட தீர்க்கமாக கட்டமைப்பார்கள். அனைவருக்கும் சர்வதேச குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, November 18, 2022

கனமழை எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள். அதன்பிறகு, இது அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
           இந்த சூழலில், பல மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது👇👇👇👇👇👇

 20-11-2022
 செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 21-11-2022
 வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
         திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

22.11.2022

 வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy Rainfall Warning by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Featured Post

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை வெற்றிக் கதை ஐ. ரோசினிதேவி ...

Popular Posts

Total Pageviews

MY ADS

MY ADS

Contact Form

Name

Email *

Message *