Wednesday, January 5, 2022
SMC IMPORTANT ORDERS
Tuesday, December 21, 2021
ஆண்டாய்வு- ஊ. ஒ. ந.நிலைப் பள்ளி வே. கொங்கிரபட்டி
Sunday, December 19, 2021
சாரண மாணவருக்கான ஆளுநர் விருது (RAJYA PURASKAR AWARD) - தேர்வு _காடையாம்பட்டி
அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்💐🙏
இன்று (19/12/2021) ஸ்ரீகாயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளி சித்தனூரில் நடைபெற்ற சாரண மாணவருக்கான ஆளுநர் விருது (RAJYA PURASKAR AWARD) தேர்வில் காடையாம்பட்டி ஒன்றிய வரலாற்றிலேயே முதல் முறையாக நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக முகாமை முடித்துள்ளார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. மாணவர்கள் விவரம் முறையே:
பாப்பிசெட்டிபட்டி
-10
உம்பளிக்கம்பட்டி-6 டேனிஸ்பேட்டை-4 அண்ணாநகர்-4
இத்தகைய நல்லதொரு வாய்ப்பை நல்கிய *சாரணம்* என்றொரு இயக்கத்தை அறிமுகம் செய்ததோடு மட்டுமன்றி தொடர்ந்து மாணவரை தயார் செய்யும் பொருட்டு ஆசிரியர்களை ஊக்குவித்து முகாம் நடத்த ஏதுவான சூழலை உருவாக்கித் தந்து நல்லதொரு வாய்ப்பினை மாணவருக்கு ஏற்படுத்தித் தந்த வட்டார கல்வி அலுவலர் திரு.இராஜேஷ்கண்ணன்.ஐயா அவர்களுக்கும்.. பள்ளி பணியின் போதும் வேறு பள்ளிக்கு சென்று மாணவருக்கான பயிற்சி அளிக்க அனுமதி தந்து மாணவர் இன்றைய நிலையை எட்ட உதவிகரமாக இருந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி.அமலா.அம்மா அவர்களுக்கும்
காடையாம்பட்டி ஒன்றிய சாரண இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்💐💐🙏 இனிவரும் காலங்களில் இன்னும் பல மாணவர்கள் இதுபோன்ற விருதுகளை பெறுகின்ற வகையில் நாம் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது மகிழ்ச்சி..