Saturday, April 23, 2022

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கே.என் புதூர் - பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு (SMC RECONSTITUTION )






இன்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் , கே.என். புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு நிகழ்ச்சியானது மிக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் அனைத்து பெற்றோர் உறுப்பினர்களையும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை பள்ளியின் சார்பாக இனிதே வரவேற்றார்
பின்னர் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் தண்டபாணி அவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு  நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.
பின்னர் மறுசீரமைப்பு நிகழ்வானது வழங்கப்பட்ட கால அட்டவணையின் படி முறையாகவும் மதிப்பிற்குரிய மாநில திட்ட அலுவலர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் 20 உறுப்பினர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு ,தங்கள் பதவியை பள்ளி மேலாண்மைக்குழு உறுதிமொழியுடன் முறையாக ஏற்றுக்கொண்டனர். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்களுக்கு அவர்களின் பொறுப்புகளும் கடமைகளும் குறித்து எடுத்துரைக்கப்பட்டது . குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வை வீராட்சியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் SMC கருத்தாளர் ஆகிய இளவரசன் ஐயா அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராகவும் கவன ஈர்ப்பு பார்வையாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் சீரிய முறையில் வழிகாட்டி உதவினார். இந்த நிகழ்வில் அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றும் அனைவரும் ஆர்வமுடன் முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

TEN BENEFITS OF TEACHING POETRY (list created by Sarah Landis)

கவிதை கற்பிப்பதன் 10 நன்மைகள்

கவிதை பெரும்பாலும் ஆசிரியரின் குரலை ஒளிரச் செய்கிறது, இதனால் உள் வெளிப்பாட்டின் மீது ஒளி வீசுகிறது!

1. கவிதைகள் உரைகளை ஆழமாக/நெருங்கிய வாசிப்பை ஊக்குவிக்கிறது, மேலும் அனுமானம் மற்றும் விளக்கம் போன்ற சிந்தனை திறன்களை வளர்க்க உதவும்.மேலும் அறிய

2. கவிதையானது கதை சொல்லும் கூறுகளை வேறு வகையின் மூலம் கற்பிக்கிறது.

3. கவிதையைச் சுற்றி வார்த்தைகள் குறைவாகவும், அதிக 'வெள்ளை இடமும்' இருப்பதால், நீண்ட நூல்களுடன் போராடும் மாணவர்களை கற்றலில் நுழையுமாறு கவிதை அழைக்கிறது. மிகக் குறைவான மற்றும் பார்வைக்கு ஈர்க்கக்கூடியது! ஜேசன் ரெனால்ட்ஸ் எழுதிய ஒவ்வொருவருக்கும்

4. சுருக்கமான மொழியைக் கற்பிக்கும் கவிதை அருமை. மாணவர்கள் எப்போது நீண்ட நேரம் எழுத வேண்டும் மற்றும் எப்போது சிறியதாக எழுத வேண்டும் என்று பயிற்சி செய்கிறார்கள்.

5. இசை/வரலாறு போன்ற பிற துறைகளுடன் கவிதை இணைக்கிறது. 6. கவிதை ஒரு செயல்திறன் சார்ந்த வகையாக இருக்கலாம். (கவிதையை சிந்தியுங்கள்

வாசிப்பு மற்றும் கவிதை ஸ்லாம்கள்.)

7. குழந்தைகள் அர்த்தத்தைப் பற்றி பேசுவதற்கு கவிதை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ('கோட்டை உயர்த்துவது', ஒரு தீம் விவாதம், மீன் கிண்ணம் மற்றும் பிற செயல்பாடுகளைப் பற்றி சிந்தியுங்கள்)

8. கவிதை ரைமை அறிமுகப்படுத்தலாம் -- நுழைவு புள்ளிகளில் ஒன்று

வெளிவரும் வாசகர்கள்.

9. கவிதை காலமற்றது! (ஷேக்ஸ்பியர் மற்றும் மாயா ஏஞ்சலோ போன்ற இறந்த கவிஞர்களுக்கும், அமண்டா கோர்மன் போன்ற வாழும் கவிஞர்களுக்கும் கற்பிக்கவும்)

சாரா லாண்டிஸ் உருவாக்கிய பட்டியல்

Saturday, April 2, 2022

ஆறாம் வகுப்பு BASIC QUIZ- TOP 5 students in KADAYAMPATTI BLOCK

🌷 *ஆறாம் வகுப்பு BASIC QUIZ- ல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் 1295 பேருக்கு பரிசுத்தொகை வழங்கி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு . (இணைப்பு மாணவர் பட்டியல்)*


இந்த இணைய வழி வினாடி வினாவில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிக மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் 35 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு ரூபாய் 2000 பரிசுப் பொருளாக வாங்கி வழங்குவதற்கு அந்தந்த பள்ளி  பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 2000 பரிசு தொகையை கொண்டு பரிசு பொருட்கள் வாங்கி வழங்குமாறும் எக்காரணத்தைக் கொண்டும் பணமாக வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தேர்வில் நமது காடையாம்பட்டி ஒன்றியத்தில் சிறப்பாக தேர்வெழுதி வெற்றி பெற்ற ஐந்து மாணவர்கள் விவரம் பின்வருமாறு

1.PUMS KANNAPADI
    SATHYA S VI STD
2.PUMS, VEERIYANTHANDA
    ARAVINTH S VI STD
3.PUMS, GURUVAREDDIYUR
 VETRIMARAN S VI STD 
4.GHSS,KANJANAICKENPATTI
   AJAY S VI STD
5.PUMS, VEERIYANTHANDA
ANUSHKA N VI STD 

10 மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஆர்வமூட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும் வட்டார வள மையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்

மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் 


வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் 

வாரம் ஒரு விஞ்ஞானி -67

நாளை காலை11 மணிக்கு.....

வணக்கம். நாளை காலை 11 மணிக்கு.....
இந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

ஜூம் இணைப்பு

Meeting ID: 829 7413 6134
Passcode: 585736

Meeting ID: 829 7413 6134
Passcode: 585736

நன்றி
அறிவியல் பலகை

.

Friday, April 1, 2022

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மார்ச் – 29 - 2007 – கணிதத்தில் நோபல் பரிசு

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*மார்ச் – 29 - 2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்ட தினம்*
                                                                                                                                                                                                   *ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு விருதாகும்*. 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த *நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்* என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
                                                                                                                                                                                    நார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ *நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள்8*.

*சாத்தமங்கலம் ரங்க ஸ்ரீனிவாச வரதன்*  
                                                                                                                                                                                    (பிறப்பு: சனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.
                                                                                                                                                                                    வரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்கன் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். 1959இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுகலை (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளியியலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963 இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968இல் இணைப்பேராசிரியரானார். 1972இல் பேராசிரியராக பணி உயர்வுபெற்று, 1980இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
                                                                                                                                                                                  இவரது மனைவி வசுந்தரா வரதன் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூயார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
                                                                                                                                                                             *பேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு*:
• வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77)
• வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972)
• வருகையாளர் பதவி, முன்னிலை ஆய்வுக்கான கழகம் (Institute for Advanced Study), பிரின்சிட்டன் (1991-92)
• ஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் (1970-72)
• கூகன்ஃகைம் பேராளர் (1984-85)
• அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)
• மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995)
• மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003)
• கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004)
• அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010
• இன்ஃபோசிசுப் பரிசு, 2013

ADD