தமிழ்நாடு அரசு
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அறிவிக்கை
தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2022-24) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டு கால தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இளம் வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது. மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும். இவை சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளிகள் இருப்பின் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை ஒருங்கிணைப்பு துறையாக செயல்படும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் கல்வி பங்காளராக செயல்படும்.
இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.06.2022 ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கிய தேதிகள் (Important Dates) தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. இதற்கான தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதை https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 10.06.2022 அன்று மாலை 6.00 மணி வரை
இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பம் செய்திட இணையதளம்
திறக்கப்படும் நாள்
25.05.2022
No comments:
Post a Comment