Thursday, September 9, 2021

எலவர்த்தி நாயுடம்மா

எலவர்த்தி நாயுடம்மா (Yelavarthy Nayudamma) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வேதிப்பொறியியலாளராவார். 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 அன்று இவர் பிறந்தார். விஞ்ஞானியான இவர் எம்பரர் கனிசுகா என்று அழைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் 182 குண்டு வெடிப்பின் போது கொல்லப்பட்டார். [2][3] ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள தெனாலி நகரத்திற்கு அருகிலுள்ள இயேலாவாரு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நாயுடம்மா பிறந்தார். கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் இங்குள்ள ஏ.சி கல்லூரியில் இடைநிலை கல்வியைப் பயின்றார். பின்னர், புகழ்பெற்ற பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வேதித் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம் பெற்றார். சென்னை தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து தோல் தொடர்பான ஒரு பட்டயப் படிப்பை முடித்தார். இந்தியாவின் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு நாயுடம்மா பங்களித்தார். நிறுவனத்தின் பன்னாட்டு பிம்பத்தை உருவாக்குவதற்கும் இந்திய தோல் தொழிலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர் பொறுப்பேற்றார். [4] நாயுடம்மா ஒய். பவானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரத்தீசு மற்றும் இரமேசு என்ற இரண்டு மகன்களும், சாந்தி என்ற ஒரு மகளும் குழந்தைகளாவர். 1971 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளும் கௌரவங்களும் நாயுடம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. [6] 1983 ஆம் ஆண்டில் சென்னை சிறீ இராச லட்சுமி அறக்கட்டளையின் மதிப்புமிக்க விருதான இராச-லட்சுமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. புதுதில்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனராக நாயுடம்மா பணிபுரிந்தார். 1981 ஆம் ஆண்டு சூன் 12 முதல் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 27 வரை புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தராக பணியாற்றினார். இவற்றைத் தவிர பல மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். 

No comments:

Post a Comment

Featured Post

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை வெற்றிக் கதை ஐ. ரோசினிதேவி ...

Popular Posts

Total Pageviews

MY ADS

MY ADS

Contact Form

Name

Email *

Message *