Saturday, November 19, 2022

சர்வதேச குழந்தைகள் தினம் 2022

 

நவம்பர் 20- சர்வதேச குழந்தைகள் தினம். இந்த ஆண்டின் Theme - Inclusion, For Every Child. ஒரு குழந்தையும் விடுபடாமல் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பது. அனைவருக்குமான சமத்துவமான உலகத்திற்காக நவம்பர் 20 அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். குழந்தைகளிடம் இது குறித்தான உரையாடல்களை நிகழ்த்துவது அவசியம். வெவ்வேறு உப தலைப்புகளிலும் இதனைப்பற்றி பேச வேண்டும்.


மொழி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து குழந்தைகளின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல், கலாச்சார, குடியுரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் ஐநா சபை 1989 நவம்பர் 20 அன்று தீர்மானம் இயற்றியது, அன்று முதலே நவம்பர் 20, சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.


நம் வீடுகளில், வகுப்பறைகளில், வீதிகளில், கிடைக்கும் தளங்களில் எல்லாம் அனைவரையும் உள்ளடக்கிய உலகம் பற்றி குழந்தைகளிடம் பேசுவோம். அவர்கள் நம்மைவிட தீர்க்கமாக கட்டமைப்பார்கள். அனைவருக்கும் சர்வதேச குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, November 18, 2022

கனமழை எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள். அதன்பிறகு, இது அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
           இந்த சூழலில், பல மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது👇👇👇👇👇👇

 20-11-2022
 செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 21-11-2022
 வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
         திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

22.11.2022

 வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy Rainfall Warning by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Saturday, November 12, 2022

NMMS - செருகபட்ட படங்கள்- எண் விபரங்கள்

 



1. காபி அருந்தாத தேநீர் மற்றும் பழச்சாறு அருந்துபவர்கள் எத்தனை பேர்?

    Ans:17

2. பழச்சாறு அருந்தாத, தேநீர் மற்றும் காபி அருந்துபவர்கள் எத்தனை பேர்?

    Ans:7

3. காபி மட்டும் அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:45

4. பழச்சாறு மட்டும் அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:122

5. மூன்றும்  அருந்துபவர்கள் எத்தனைபேர்?

    Ans:15

    


*தேசிய குழந்தைகள் தினம்* - 1புத்தகம்+2முகமூடி - அறிவியல் இயக்கம்

*தேசிய குழந்தைகள் தினம்* சிறப்பு செயல்பாடாக *நம்ம மாமா நேரு- ஆயிஷா இரா.நடராசன் & காந்தி என்னும் மகாத்மா - கமலாலயன் புத்தகம் ~₹60~ சலுகை விலை ₹30 (சலுகை விலை நவம்பர் 14 வரை பணம் செலுத்தி வாங்குபவர்களுக்கு மட்டும்) & முகமூடிகள் காந்தி மற்றும் நேரு தனித்தனியாக தலா ₹5*

*1புத்தகம்+2முகமூடி என மொத்தம்= ₹40*

தேவைகளுக்கு தங்கள் ஒன்றிய/ பகுதி கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

தங்கள் பகுதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை நண்பர்களின் தொடர்பு எண் தகவல்களுக்கு 9486596174 (மாவட்ட பொருளாளர்)

புத்தக அறிமுகம், புத்தக வாசிப்பு இயக்கம் என தங்கள் பள்ளி / பகுதி / வீடுகளில் முன்னெடுக்க வாழ்த்துக்கள் 🤝


ADD